மானிய விலையில் உளுந்து விதைகள்

பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளிட்ட செய்திக் குறிப்பு:

பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமான சான்று பெற்ற மதுரை-1, வம்பன்-4, 5, 6,  ஆகிய உளுந்து ரக விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 

அத்துடன் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், சிறு தானிய பயிர்களான வரகு, குதிரைவாலி விதைகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விதை வாங்க வரும் விவசாயிகள் உடன் ஆதார் அட்டையை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter