நாவல் சாகுபடி தொழிற்நுட்பம்

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது.

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயிரிடுவது குறைவாக உள்ளது ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும்.

நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.

இதன் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகள் ஆகும். இது தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர் மற்றும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. இது புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இமயமலையில் 1300 மீட்டர் வரை மற்றும் குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றது. இது பரவலாக கங்கை சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை வளர்க்கப்படுகிறது.

மண்

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும்  தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது.

காலநிலை

நாவல் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளரும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. மித வெப்ப மண்டல பகுதிகளில், மழைப் பொழிவு பழம் பழுக்கும் தருணத்தில் இருப்பதால்  பழங்களின் எடை, நிறம் மற்றும் சுவை அதிகரிக்கும்.

வகைகள்    

பொதுவாக வட இந்தியாவில் வளர்க்கப்படும் வகை “ராம் நாவல்” ஆகும். பழங்கள் பெரியதாகவும், நீள்சதுர வடிவாகவும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்திலும் இருக்கும். நன்கு பழுத்த பழத்தின் கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம் அதிக சாறுடையதாகவும் இனிப்பாகவும் இருக்கும். கொட்டை அளவு சிறியதாக இருக்கும். இந்த வகைகள் ஜ%ன், ஜ%லை மாதங்களில் பழுக்கும். இவை கிராமப்புற மற்றும் நகர்புற சந்தைகளில் அதிகமாக காணப்படும்.

மற்றொரு வகையானது, பழங்கள் சிறிய அளவாகவும், சற்று உருண்டையாகவும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறம் அல்லது கருமையாகக் காணப்படும். சதை ஊதா நிறமாக இருக்கும். இது குறைவான சாறுடையது, எடை மற்றும் சதையின் இனிப்புத் தன்மை ராம் நாவலைவிடக் குறைவு ஆனால் கொட்டை அளவு பெரியதாக இருக்கும். பொதுவாக இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.

தற்பொழுது, பல வகைகள் இந்தியாவில் உள்ளதால் நல்ல இரகங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

Newsletter