வேளாண் பல்கலை.,யில் ஒரு மாணவருக்கு ஒரு மரம் நிகழ்ச்சி

கோவை: கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 'ஒரு மாணவருக்கு ஒரு மரம்' என்ற மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை: கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 'ஒரு மாணவருக்கு ஒரு மரம்' என்ற மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



வேளாண் பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் மகிமைராஜா மற்றும், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதன்மையர் ஜவஹர்லால் ஆகியோர் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

கல்லூரி வளாகத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில், அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Newsletter