கழிவு மறுசுழற்சியை ஊக்குவிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கோவை : கழிவு மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கிடையிலான மறுசுழற்சி போட்டிகள் நடைபெற்றன.

கோவை : கழிவு மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கிடையிலான மறுசுழற்சி போட்டிகள் நடைபெற்றன. 



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலியல் துறை மற்றும் ஐ.டி.சி., டபுள்யூ.ஓ.டபுள்யூ., இ.எஸ்.ஆர்.இ.இ., நிறுவனமும் இணைந்து கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கிடையிலான 2018 – 19ம் ஆண்டிற்கான மறுசுழற்சி போட்டிகள் வேளாண் பல்கலைக்கழக மட்கு உரம் உற்பத்தி வளாகத்தில் நடைபெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பயிர் மேலாண்மை இயக்குநரக இயக்குனர் மற்றும் இயற்கை வள மேலாண்மை இயக்கக இயக்குனர் (பொறுப்பு) ஜெயந்தி கலந்து கொண்டார். அப்போது, தூய்மை இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு தனிமனிதரும் பங்காற்ற வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் தங்கள் பகுதிகளில் மறுசுழற்சி கழிவுகளை மேலாண்மை செய்யும் முறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



ஐ.டி.சி., டபுள்யூ.ஓ.டபுள்யூ., இ.எஸ்.ஆர்.இ.இ., நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், "கோவையில் நாளொன்றுக்கு சுமார் 900 டன் கழிவுகள் உற்பத்தியாகிறது. அவற்றில் 40 சதவித கழிவுகள் மறுசுழற்சிக்கு உகந்தவை," என்றார். 

இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் ஒப்படைத்த மறுசுழற்சிக்கு உகந்த காகித கழிவுகளுக்கு ஈடாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் ஐ.டி.சி., டபுள்யூ.ஓ.டபுள்யூ., இ.எஸ்.ஆர்.இ.இ., நிறுவனத்தால் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் மாணவ மாணவியரிடமிருந்து 2 டன்னுக்கும் அதிகமான மறுசுழற்சிக்கு உகந்த காகித கழிவுகள் பெறப்பட்டன. அதிக அளவில் காகித கழிவுகளை ஒப்படைக்கும் தனி நபர் மற்றும் துறைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter