மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனம் - வேளாண் பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கோவை: மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இது தொடர்பாக வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு. இராமசாமி, மருந்து மற்றும் மண மூட்டும் நறுமணப் பயிர்கள் நிறுவன இயக்குநர் முனைவர் ஏ.கே. திரிபாதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களும் நறுமண பயிர் திட்டத்தின் கீழ் மருந்து மற்றும் நறுமண ஆராய்ச்சி திட்டங்களையும் கிராமப்புற தொழில் நுட்பங்களையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன. மேலும், இரு நிறுவனங்களும் இணைந்து ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனமானது, நறுமணப் பயிர்களில் தரமான நடவு செடிகளை விவசாயிகளுக்கு வழங்குதல், எண்ணெய் வடித்தெடுப்பு கலனை சாகுபடி பரப்பளவிற்கு ஏற்ப வழங்குதல், சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக் கூட வசதிகளை ஆராய்ச்சி திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு நறுமண பயிர்களில் தரமான ரகங்கள் நடவு செய்வதற்கு கிடைக்க ஏதுவாக இருக்கும். இந்த ஒப்பந்தமானது மூன்று வருடத்திற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter