கோவையில் வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண்மை விஞ்ஞானிகளுக்காக 'சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகளைப் பயன்படுத்துதல்' குறித்த 21 நாள் பயிற்சியானது நடைபெற்று வருகிறது.

பூச்சியியல் துறை, பயிர் பாதுகாப்பு மையம் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மேற்குவங்கம், மத்தியபிரதேசம், ஜம்முகாஷ்மீர் மற்று தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில், துறை வல்லுனர்கள் வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சியளிக்க உள்ளனர். 

Newsletter