சின்ன வெங்காயத்தின் விலை குறுகிய காலத்திற்கு லாபத்தை தரும்

கோவை : ஏற்றுமதி தேவை குறைவு மற்றும் பதுக்கல் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை குறுகிய காலத்திற்கு லாபத்தை தரும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

கோவை : ஏற்றுமதி தேவை குறைவு மற்றும் பதுக்கல் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை குறுகிய காலத்திற்கு லாபத்தை தரும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் :- தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பயிரிடும் காய்கறி பயிர்களில் சின்ன வெங்காயம் முக்கிய பயிர்களாகும். தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்படுகின்றது. கோ 5 சின்ன வெங்காய ரகம் ஏற்றுமதிக்கு அதிகளவு விரும்பப்படுகிறது. இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு தமிழ்நாடு சின்ன வெங்காயம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

வர்த்தக ஆதாரங்களின்படி, ஜுலை 2018 கடைசி வரை சின்ன வெங்காயம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய பருவத்தில் சின்ன வெங்காயத்திற்கான ஏற்றுமதி தேவை குறைவாகவே உள்ளது . 

தற்போது தாராபுரம், பல்லடம் மற்றும் உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களிருந்து வரத்து திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைகளுக்கு புதிய சின்ன வெங்காயம் வருகிறது. மைசூரிலிருந்து வரும் சின்ன வெங்காயம் தரமானதாக இல்லை. விவசாயிகளுக்கு சின்ன வெங்காயத்தின் விலை உயரும் எனும் எதிர்பார்ப்பில் சேமிக்க தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் தேவைகளை பொருத்து  எதிர்வரும் குறுகிய காலத்திற்கு சின்ன வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் அறுவடை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில்], அறுவடையின் போது, தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 41 முதல் ரூ.45 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கின்றனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter