நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்யுங்கள்: அமைச்சர் துரைக்கண்ணு

நீண்ட கால நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை இம்மாதம் 2-ஆவது வாரத்துக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

நீண்ட கால நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை இம்மாதம் 2-ஆவது வாரத்துக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி குறித்து தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், அமைச்சர் துரைக்கண்ணு பேசியது:

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. சாகுபடிப் பணிகளுக்காக மேட்டூர் அணையும் திறக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நெல் ரகங்களான சி.ஆர்.1009, சி.ஆர்.1009சப் 1, ஏ.டி.டி.49 ரகங்களை சாகுபடி செய்ய ஏதுவாக அதற்குத் தேவையான விதைகளை போதிய அளவில் டெல்டா மாவட்டங்களில் இருப்பு வைக்க வேண்டும்.

சம்பா சாகுபடிக்குத் தேவையான டி.ஏ.பி., யூரியா, காம்ப்ளெக்ஸ், பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இடுபொருள்களின் தரம், தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் ஆய்வு செய்து உறுதி செய்யப்பட வேண்டும்.

நெல் விதைகள், தேவையான உரங்களை உரிய காலத்தில் பெற்று சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்குப் பிறகு நீண்டகால நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவ்வப்போது விவசாயிகளுக்கு அளித்து உயர் மகசூல் பெற உதவிட வேண்டும்.

Newsletter