தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: வேளாண் பல்கலை சார்பில் தக்காளி மற்றும் பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 2-ம் தேதியன்று நடைபெற உள்ளது.

கோவை: வேளாண் பல்கலை சார்பில் தக்காளி மற்றும் பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 2-ம் தேதியன்று நடைபெற உள்ளது. 

வேளாண் பலகலைக் கழகத்தின் உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோவை விற்பனைக் குழுவின் கோதவாடிப் பிரிவில் “தக்காளி மற்றும் பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஆகஸ்ட் 2-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. 

பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள் :-

* பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்

* ஜாம், அல்வா மற்றும் பட்டர்

* கேண்டி, பொடி மற்றும் துருவல்

* தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750-ஐ பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள 0422- 6611340 , 6611268 , 94425 99125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter