மலர் சாகுபடியில் ரூ. 575 கோடி அன்னிய செலாவணி பெற முடியும் : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்

கோவை : 3 நாட்கள் நடைபெறும் 27-வது அகில இந்திய மலர்கள் ஆராய்ச்சி குழும சீராய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

கோவை : 3 நாட்கள் நடைபெறும் 27-வது அகில இந்திய மலர்கள் ஆராய்ச்சி குழும சீராய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.



இதில், டி.ஜானகிராமன், உதவி இயக்குனர் ஜெனரல், (தோட்டக்கலை துறை )இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழும், டெல்லி மற்றும் விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மலர் சாகுபடியில் விவசாயிகளில் வருமானத்தை இரட்டிப்பு எப்படி ஆக்குவது, மலர்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எப்படி உருவாக்குவது என்கிற கருத்தரங்குகள் நடைபெற்றன.



அதன் பின்னர், ஜானகிராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழுமம் தேசிய வேளாண் வளர்ச்சியில் சுமார் 500 மில்லியன் டன்கள் தானிய உற்பத்தியை 5 ஆண்டுகளில் பெற்றிட பெரிதும் துணைபுரிந்துள்ளது. இதில், 23 வகையான துறைகள் பங்காற்றுகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் இந்தியா தான் காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கின்றன. நஞ்சற்ற காய்கறிகள் உற்பத்திக்கான ஆராய்ச்சி இந்தியாவில் இன்னும் வலுப்பட வேண்டும். எனவே, மலர் சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க இதுவே சிறந்த தருணம்.



மலர் சாகுபடியில் ரூ. 575 கோடி அன்னிய செலாவணி பெறுதல் முடியும். இந்தியாவில் 2.5 லட்சம் ஹெக்டரில் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. மல்லிகை, செண்டு மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி ஆகியவை முக்கிய மலர் சாகுபடிகள் ஆகும். ரோஜா பூவை அதிகம் ஏற்றுமதி செய்ய பசுமை குடிகள் பெரிதும் உதவுகின்றன. தாமரை, செம்பருத்தி மலர்கள் உலகளவில் பெரிதும் விரும்பப்படுகின்றன.



புல்தரை மேலாண்மைக்கு அதிக வாய்ப்புள்ளது. உலகளவில் 70 சதவிதம் உலர்ந்த மலர் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளது. ரோஜா மலரை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி குல்காந்த், மற்றும் பேரிச்சம்பழத்துடன் சேர்ந்து உணவு பொருளாக மாற்றி அனுப்பினால் இன்னும் வரவேற்பு அதிகம்," என்றார்.

Newsletter