விவசாயிகள் மானிய விலையில் பழச் செடிகளைப் பெற ஏற்பாடு

பழச் செடிகளை மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்கு தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


பழச் செடிகளை மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்கு தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்த விவரம்:

தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய இயக்கத்தின் கீழ் மானாவரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மானாவாரி பகுதிகளில் சாகுபடிப் பரப்பை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது ஆகிய நோக்கங்களை முன்வைத்து இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், விவசாயிகள் பலர் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி, நிகழாண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் 100 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு மா, கொய்யா, முருங்கை மற்றும் பப்பாளி போன்ற பயிர்கள் வழங்கப்படவுள்ளன. அதோடு, ஊடுபயிர்களைச் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படவுள்ளது.

மேலும், குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரும் பசுமைக்குடில் (4,000 சதுர மீட்டர்), நிழல் வலைக்குடில் (4,000 சதுர மீட்டர்) அமைக்கவும் மானியம் வழங்கப்படவுள்ளது. தவிர, மண்புழு உரக்கூடம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். விவசாய உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்த விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், "உழவன் செயலி' மூலம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்களை தொடர்புகொண்டும் பயன்பெறலாம். தோட்டக்கலை அதிகாரிகள் விவரம்:



Newsletter