தரமற்ற விதையால் 270 ஏக்கர் நெல் விளைச்சல் பாதிப்பு: இழப்பீடு பெற்றுத் தர விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டையில் தனியார் விதை மையத்தில் விதைகளை வாங்கி பயிரிட்டதால் 270 ஏக்கர் நெல் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் தனியார் விதை மையத்தில் விதைகளை வாங்கி பயிரிட்டதால் 270 ஏக்கர் நெல் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற விதைகளை வழங்கிய தனியார் விதை மையத்தின் மீது நடவடிக்கை எடுத்து, இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

 à®µà®¿à®´à¯à®ªà¯à®ªà¯à®°à®®à¯ மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை காலை மனு அளிக்க வந்த உளுந்தூர்பேட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:

 à®‰à®³à¯à®¨à¯à®¤à¯‚ர்பேட்டை, திருச்சி சாலையில் விதைப்பண்ணை நடத்தி வரும் விஸ்வநாதனிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவைப் பயிரான ஆடுதுறை 37 ரகம், நெல் விதையை வாங்கி பயிரிட்டனர். 3 மாதம் ஆன நிலையிலும் நெற் கதிர்கள் வராமலேயே பயிர்கள் காயத் தொடங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விசாரித்ததில், இதேபோல விஸ்வநாதன் கடையில் இதே ரக நெல் விதைகளை வாங்கி பயிரிட்ட 67 விவசாயிகளின் 270 ஏக்கர் நெல் பயிரும் விளைச்சல் பாதித்திருப்பது தெரிய வந்தது.

 à®‡à®¤à¯à®•ுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் விஸ்வநாதனிடம் சென்று முறையிட்டோம். விஸ்வநாதனும் நேரில் வந்து, பயிர்களை பார்வையிட்டு நெல் விதைகளில் ஏதோ பாதிப்பு இருப்பதை உறுதிபடுத்தினார்.

 à®†à®©à®¾à®²à¯, இந்த விதைகளை, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மொத்த விதை மையத்திலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 40 பேர், விஸ்வநாதனுடன் தாராபுரத்துக்கு சென்று, அந்த விதை மையத்தில் முறையிட்டோம். அவர்களும், தாங்கள் வழங்கிய, நெல் விதைகளில் குறையிருப்பதை உணர்ந்து, ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் இழப்பீடு தருவதாக ஒப்புக் கொண்டனர். முதல் கட்டமாக, ரூ.10 லட்சம் ரொக்கத்தை வழங்கினர். அதன்பிறகு, மேலும் ரூ.13 லட்சத்தை ஜூன் 23-ஆம் தேதி தருவதாகக் கூறினர். ஆனால், கூறியபடி தரவில்லை.

 à®µà¯‡à®±à¯ ரக நெல்லை, ஆடுதுறை 37 என்று விற்பனை செய்த விதைக் கடை மற்றும் மொத்த விற்பனை மையம் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 à®…ப்போது, அவர்களுடன் வந்திருந்த விதைக் கடை உரிமையாளர் விஸ்வநாதன் கூறியதாவது: நான் அண்மையில்தான் புதிதாக விதைக் கடை வைத்தேன். ஆடுதுறை பயிர் குறுகிய காலப் பயிர். இந்த நெல் ரகத்துக்குப் பதிலாக, 8 மாதங்கள் வளரக்கூடிய நெல் ரகத்தை மொத்த விற்பனை மையம் வழங்கியதே இந்த குளறுபடிக்கு காரணம். இந்த நிறுவனத்தில் இருந்து மொத்தம் 405 மூட்டைகளில் விதை நெல் வாங்கியிருந்தேன். இந்த குளறுபடிகள் தெரிந்த பிறகு, 147 மூட்டைகளை திருப்பி அனுப்பி விட்டேன். இதில், நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார்.

 à®ªà®¿à®©à¯à®©à®°à¯, பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதை கடை உரிமையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துச் சென்றனர்.

 à®‡à®¤à¯à®ªà¯‹à®©à¯à®±, விதை விற்பனை கடைகளுக்கு வேளாண் அதிகாரிகள் சென்று முறையாக விதைகள் வழங்கப்படுகின்றனவா? போலி விதைகள், மோசடி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசு விதை விற்பனை மையங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தரமான விதைகளை இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

 

 

Newsletter