கத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி!

கத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி!


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் காவாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்சலாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் மகன் திருவேங்கடம். விவசாயியான இவர் சிறுவயது முதல் விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்களால் ஈர்ககப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரது நிலத்தில் இயற்கை விவசாயம் மூலம் மண் புழு உரம் தயாரித்து கத்திரிக்காய், வெண்டக்காய், புடலங்காய், பாகற்காய், வேர்கடலை, பராம்பரிய நெல்வகைகள் ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அரச மரம், வேம்பு, புங்கன், புளியம்மரம், பழவகையான, மாமரம், கொய்யா, பலா உள்ளிட்ட à®ªà®²à¯à®µà¯‡à®±à¯ வகையான மரக்கன்றுகள் மற்றும் பூ வகை செடிகள், மூலிகை செடிகள், அழகு செடிகள்,உள்ளிட்ட பல்வேறு வகையாக செடிகளை இயற்கையான முறையில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்று வருகிறார். மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டு பெற்று விவசாய நிலத்தை சுற்றிலும் வரப்பு ஒரங்களில் பூச்சி விரட்டி செடிகளும் வைத்துள்ளார். குட்டை,பண்ணை ஆகியன அமைத்து மீன்களும் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். 12 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் விவசாயத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.



கடந்த ஆண்டு இறுதியில் திண்டிவனம் அருகேயுள்ள ஆவனிபூர் என்ற பகுதியில் கின்னஸ் சாதனைக்காக கத்திரிக்காய் செடி நடும் போட்டி நடந்தது. இதில் திருவேங்கடம் தலைமையில் 2683 விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் 3 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் கத்திரிச்செடி நடவு செய்தனர். சீனாவில் இதே போன்று நடந்த போட்டியில் 2 ஆயிரம் பேர் ஒன்று கூடி காய்கறி செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். அச்சாதனையை திருவேங்கடம் தலைமையில் ஒன்றுக்கு கூடி விவசாயிகள் முறியடித்து கின்னஸ் சாதனை படைத்து தமிழக விவசாயிகளுக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

Newsletter