எலுமிச்சையைத் தாக்கும் புதிய வேர்முடிச்சு : வேளாண் பல்கலையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

எலுமிச்சையைத் தாக்கும் புதிய வேர்முடிச்சு கோவை மற்றும் ஈரோடு பகுதி விவசாய பரப்பில் ஏற்பட்டுள்ளதாகவும். அவ்வாறு எலுமிச்சை விவசாயம் பாதிக்கப்பட்டால் வேளாண் பல்கலையை தொடர்பு கொள்ளலாம் என்று அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது

கோவை: à®Žà®²à¯à®®à®¿à®šà¯à®šà¯ˆà®¯à¯ˆà®¤à¯ தாக்கும் புதிய வேர்முடிச்சு கோவை மற்றும் ஈரோடு பகுதி விவசாய பரப்பில் ஏற்பட்டுள்ளதாகவும். அவ்வாறு எலுமிச்சை விவசாயம் பாதிக்கப்பட்டால் வேளாண் பல்கலையை தொடர்பு கொள்ளலாம் என்று அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

 

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அண்மைக் காலமாக எலுமிச்சை செடிகளில் பின் நோக்கி வாடல் மற்றும் இலைகள் மஞ்சளாகி உதிரும் அறிகுறிகள் தோன்றிவருகின்றன. இவ்வகையான செடிகளில் பூக்கள் பூத்து மிக சிறிய காய்கள் காய்ந்து அவையும் உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு பாரிக்கப்பட்ட செடிகளை ஆய்வு செய்ததில், வேர்களில் சிறிதும் பெரிதுமான முடிச்சுகள் காணப்பட்டன.



இம்முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் பெண் நூற்புழுக்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் மிலாய்டோகைன் இண்டிகா எனும் தனியினம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் முதன் முறையாகக் கண்டறியப்பட்ட இந்த வேர் முடிச்சு நூற்புழுத் தனியினம் பாலாஜி என்னும் எலுமிச்சை ரகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாற்றுகளில் இருந்தே இந்த புதிய ரக புழுக்கள் தமிழ்நாட்டில் பரவக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

எனவே, உழவர் பெருமக்கள் தங்கள் எலுமிச்சைத் தோட்டங்களில் உள்ள எலுமிச்சை மரத்தின் வேர் மற்றும் மண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி நூற்புழுத்தாக்கம் உள்ளதா? என்று அறிந்து அதற்கேற்ற வழிமுறைகளைக் கையாளவும். 

இத்தகவலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கி. பூர்ணிமா மற்றும் துறைத்தலைவர் ச. சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். 

மேலும், விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறையை அணுகவும். 

தொடர்புத் தொலைபேசி எண். 0422-6611264.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter