6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன்

கூட்டுறவு வங்கிகள் மூலமாக தமிழகம் முழுவதும் நிகழாண்டில் இதுவரை 6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 443 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

கூட்டுறவு வங்கிகள் மூலமாக தமிழகம் முழுவதும்  நிகழாண்டில் இதுவரை 6.86 லட்சம்  விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 443 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், நடைபெற்றது. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்குதலில் எய்தப்பட்ட முன்னேற்றம், கூட்டுறவு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 à®‡à®¤à®¿à®²à¯ அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:

  நிகழாண்டில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 443 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,229 விவசாயிகளுக்கு ரூ.47.26 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை, தேனி மாவட்டங்களில் 43 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.  

அதேபோல, கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் அரசுத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் 4,469  பொது சேவை மையங்கள் மூலமாக இதுவரை ரூ.77.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்  மதுரை மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 78 விவசாயிகளுக்கு ரூ.14.06 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இணைப் பதிவாளர் (நிதி மற்றும வங்கியியல்) ஜி.ரவிக்குமார், மதுரை மண்டல இணைப் பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter