உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 15

உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பொறியியல் பிரிவு சார்பில் ”ஃபுட் எக்ஸ்ப்ளோர்” என்ற 10-வது தேசிய அளவிலான உணவு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், உணவு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் எந்தெந்த வகையிலான தொழில்நுட்பங்களை தற்போது பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது மற்றும் உணவு உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பில் வழங்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து இதில் எடுத்துக் கூறப்பட்டது. விரைவில் பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இரசாயனம் இல்லாத உணவை மக்களிடம் எவ்வாறு விவசாயிகள் கொண்டு சேர்க்க முடியும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள் விவாதித்தனர்.

Newsletter