வெர்டிகல் ஃபார்மிங்: வீட்டுக்குள்ளேயே வேளாண்மை!

தற்போதைய காலகட்டத்தில் வேளாண் தொழில் அழிந்து வரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகள் அதிகரித்தல், தொழில்மயமாக்கம், புதிய தொழில் நுட்பங்கள், காடுகள் அழிதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவமழை பொய்த்துப் போதல், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக உருமாறுவது போன்ற காரணங்களால் வேளாண் தொழில் முழுவதுமாக அழிந்து விடுமோ என்ற அச்சமடையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை நலிந்து வருவதால், கிராமங்களில் உள்ள மக்கள் நகர்ப்புறங்களில் வேறு தொழிலுக்குச் சென்றுவிடுகின்றனர். இருந்தாலும் படித்த நடுத்தர மக்களுக்கு வேளாண் தொழிலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நகர்ப்புறங்களில் வேளாண்மை செய்ய இடம் இல்லை. எனவே இருக்கும் இடத்திலேயே வேளாண் தொழிலைச் செய்ய வேண்டுமானால், அதற்கு பயன்படுவதுதான் வெர்டிகல் ஃபார்மிங் எனப்படும் அடுக்கு வேளாண்மை முறை.

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும் சிறிய இடத்திலேயே வேளாண்மை செய்ய அடுக்கு வேளாண்மை முறை வழிவகுக்கிறது.

இருக்கின்ற இடத்தில் அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டு அடுக்குகளில் மண்ணிட்டு அதில் நமக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்கலாம். அதற்கான பயிற்சியும், அதுகுறித்த கல்வியும் பயின்றால் நகரம் மற்றும் மாநகரங்களில் கூட வேளாண்மை செய்யலாம். மாடி தேட்டங்களில் கூட இத்தகைய அடுக்கு வேளாண்மை முறையில் உணவுப் பொருட்களை விளைவிக்கலாம். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சி அளிக்கும் சில அமைப்புகள்:
futurefarms - http://www.futurefarms.in/
Institute Of Horticulture Technology - http://www.iht.edu.in/
PetBharo - http://www.petbharoproject.co.in/Training.php
hamarikrishi - http://www.hamarikrishi.com/
- எம்.அருண்குமார்

Newsletter