நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு வியாழக்கிழமை (நவ.30) கடைசி நாளாகும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சம்பா நெல்பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து வருகின்றனர். வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

 à®®à®¾à®µà®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ உள்ள 168 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 85 பொதுச் சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.390 பிரீமியத் தொகையாகும். முன்மொழிவு படிவம், சமீபத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, நடப்பு சம்பா பருவத்துக்கான அடங்கல், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கெனவே பெற்ற கடன் தொகை நிலுவையில் உள்ள விவசாயிகளும் தங்களை கடன் பெறாத விவசாயியாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பொதுச் சேவை மையங்களைப் பொறுத்தவரை, கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர்க் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 இல் தொடர்பு கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.390 பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter