விதை வெங்காயம் விலை உயர்ந்தது

தேனியில் சின்ன வெங்காய விதையின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

சில்லமரத்துப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயங்கள் கேரளா உட்பட தமிழகத்தின் பல்வேறு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மழை குறைந்ததால் சாகுபடியும் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150 வரை விறக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த மாதம் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்ற வெங்காய விதை, 200 ரூபாயாக விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் பொங்கல் காலங்களில் சின்ன வெங்காயத்தின் விலை பெருமளவில் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் விதைகள் தரம் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter