சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி


கோவை, நவம்பர் 1: சிறு தானியங்களிலிருந்து மதி்ப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் இருநாள் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி”  வரும் 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

கீழ்க்கண்டத் தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் 

• பாரம்பரிய உணவுகள்

• பிழிதல்

• அடுமனைப்பொருட்கள்

• உடனடி தயார்நிலை உணவுகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ1,500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.  

 

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடை பின்சார் தொழில் நுட்பத்துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், 

கோயம்புத்தூர் - 641 003. 

தொலைபேசி எண் : 0422 - 611268, 1340

Newsletter