கோமுகி அணையில் இருந்து 22-இல் நீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

கோமுகி அணையில் இருந்து வரும் 22-ஆம் தேதி நீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:-விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனையேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து வரும் 22-ஆம் தேதி முதல் நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Newsletter