மூலிகை தொழிலுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது, மூலிகை ஆராய்ச்சியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு கூற்று

மத்திய அரசின் உயிர் தொழிட்நுட்பவியல் துறை, தமிழக அரசின் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல், உயிர்தொழிற்நுட்பவியல் மையம் இணைந்து மூலிகை ஆராய்ச்சியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.



இந்தக் கருத்தரங்கானது மூலிகை ஆராய்ச்சியில் உயிர் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்தக் கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளியிலிருந்து 200-க்கும்  மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயதொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மூலிகை மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோரான இந்திய தனியார் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்புத் தலைவர் பி.எம்.முரளி, புதுதில்லி உயிர் தொழிற்நுட்பவியல் துறை ஆலோசகர் முகமது அஸ்லாம், கன்னோஜ் நறுமணம் மற்றும் மணமூட்டும் பயிர்களுக்கான வளர்ச்சி மைய இயக்குநர் சக்தி வினய் சுக்லர், தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவன கூடுதல் இயக்குநர் சஜீவனா, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்தொழிற்நுட்பவியல் மைய இயக்குநர் ஆர்.ஞானம், உயிர் தொழில்நுட்ப துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் மோகன்குமார் மற்றும் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கருத்துக்களை வழங்கினர்.



மேற்கூரிய மாநாடானது தமிழக உயிர் தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கு மூலிகை ஆராய்ச்சியினை அறிமுகப்படுத்தி அதிலுள்ள தொழில்முனையும் வாய்ப்புகளை எடுத்துரைக்கும் கருத்தரங்காக நிறைவுற்றது.

Newsletter