சுற்றுப்புற - பயிர் வினையியல் குறித்த 3 நாள் செயல்முறை பயிற்சி முகாம்

சுற்றுப்புற பயிர்வினையியல் குறித்து  பயிர்வினையியல் துறையின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கான்கர்டு சாதனங்கள் என்ற அமைப்பின் சார்பாக 3 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் இந்த செயல்முறை பயிர் வகுப்புகளில் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (கல்வித்துறை) என். சந்திரசேகர், சிறப்பு அலுவலர் னு. ஜவஹர், இயற்கை வள மேலாண்மை  பயிற்சிக்கு வருகை தந்த பயிற்சியாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், மண்ணின் முக்கியத்துவம்  தாவரத்தில் சூழ்நிலை மாறுபாடுகளின் முக்கியத்துவம் ஆகியன வேளாண்மையில் எவ்வாறு பங்கு ஆற்றுகிறது என எடுத்துரைத்தார். 



பயிர் மேலாண்மை இயக்குநர் ஊ. ஜெயந்தி பேசுகையில், பயிர்வினையியலின் முக்கயித்துவமானது தாவரத்தின் மகசூல் மற்றும் தாவரத்தின் தரத்தினை மேம்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  இவ்விழாவில், பல்வேறு துறைத் தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter