வேளாண் பல்கலையில் தொழிற் முனைவோருக்கான உணவு பதப்படுத்தும் பயிற்சி

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து கிணத்துகடவு, கோதவாடி பிரிவில் உணவு பதப்படுத்தும் மையம் மற்றும் பயிற்சிக் கூடத்தை நிறுவி அறுவடைபின் நேர்த்தி செய்யும் தொழில் நுட்பங்கள் பயிற்சி அளித்து வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள்  விளைவிக்கும் பழங்கள், காய்கறிகள், தானியங்கடள, ஆகியவற்றை மதிப்புமிகு பொருட்களாக மாற்றி தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு பதப்படுத்தும் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு பெறலாம்.

26.9.2017அன்று நெல்லியிலிருந்து மதிப்புமிகு உணவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது நெல்லியில் உள்ள சத்துக்கள், நெல்லி சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் ஆரோக்கியம் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. 

பின்னர், நெல்லியிலிருந்து பல தரப்பட்ட உணவுகள் தயாரிக்கும் முறை பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நெல்லி கேண்டி, நெல்லி பழரசம், நெல்லி தயார்நிலை பானம், ஊறுகாய், ஜாம், பாக்கு போன்ற உணவகள் தயாரிக்கும் முறைகளும் அதில் உள்ள நுணுக்கங்களும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.

 

இதனைத்தொடர்ந்து, தொழில் துவங்குவதற்கு தேவையான உபகரணங்கள் பற்றியும், திட்ட அறிக்கை தயார் செய்வது பற்றியும், எப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழ் வாங்குவதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கவுரை அளிக்கப்பட்டது. இதே போன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை. தொலைபேசி எண்- 0422 6611268, 6611340 தொடர்புகொள்ளலாம்.

உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோதவாடி பிரிவு, கிணத்துக்கடவு. தொலைபேசி எண் 94425 99125 தொடர்புகொண்டு தொழில் முனைவோராக மாறலாம்.

Newsletter