வேளாண் பல்கலைக் கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உயிர் சக்தி துறையும் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் இணைந்து நடத்தும் புதுப்பிக்கத்தக்க தொழில் நுட்பத்திற்கான 4 நாட்கள் பயிற்சி முகாமானது இன்று (செப்டம்பர் 25) வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்பட்டது. இதனை, சென்னை வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமை பொறியாளர் ஆர்.மணி துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, முன்னுரை வழங்கிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உயிர்சக்தி துறையின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான சு.புகழேந்தி கூறும்போது, வருங்காலத்தில் எல்பிஜி-க்கான மானியம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதால் மாற்று தொழில்நுட்பமான சாண எரிவாயுவானது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெறும் என்றும் அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் உறுதியளித்தார்.



வரவேற்புரை வழங்கிய வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சி.திவாகர் துரைராஜ் கூறும்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமானது 1982-ம் ஆண்டு பேராசிரியர் சி.ஆர்.சுவாமிநாதன்-ஆல் தொடங்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தின் முன்னோடியாகும். மேலும் சாண எரிவாயு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்பிய பெருமை இக்கல்வி நிலையத்தையே சேரும் எனவும் கூறினார்.

மேலும், இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொண்டு அதனை விவசாயிகளுக்கு கொண்டு செல்லுமாறு ஊழியர்களைக் கேட்டுகொண்டார்.

பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆர்.மணி, வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கிடையே பரப்புவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், NABARD  à®•ுறித்த விளக்கங்களையும் விவசாயிகளிடையே கொண்டு சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சிறப்புரை வழங்கிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கல்வி விரிவாக்கத்துறை இயக்குநர், ஆராய்ச்சி கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவையே 3 முக்கிய தேவைகள் ஆகும். மேலும், இத்தேவைகளை அடைய பயிற்சியானது முக்கிய பங்காற்றுகிறது எனத் தெரிவித்தார். 



இறுதியாக உயிர்சக்தி துறை உதவி பேராசிரியர் ரா.மகேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter