அக்.,12-ல் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி

சாகுபடி செய்யும் பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரியல் முறை சார்ந்த பூச்சி கட்டுப்பாட்டை பயன்படுத்தப்படும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியா மற்றும் நச்சுயிரிகள் பற்றிய தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியில் பயிர் சாகுபடி செய்யும் உழவர்கள், பண்ணை மகளிர், வீட்டுத்தோட்ட காய்கறி சாகுபடியாளர்கள், குறிப்பாக பெண்கள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதனை கருத்தில் கொண்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையத்தில் இயங்கும் பூச்சியியல் துறை சார்பாக “நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி” வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் பூச்சியியல் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் 0422-6611414 மற்றும் 0422-6611214 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அக்டோபர் 10ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சி பெறும் உறுப்பினர்களுக்கு à®šà®¾à®©à¯à®±à®¿à®¤à®´à¯à®®à¯ வழங்கப்படும். 

பயிற்சி நாளன்று பங்குபெறும் பயிற்சியாளர்களுக்கு இரு நேர தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.750 இத்தொகையை பயிற்சி நாள் அன்று காலை செலுத்த வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர்

பயிர் பாதுகாப்பு மையம்,

பூச்சியியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோவை - 641 003.

0422-6611414 மற்றும் 0422-6611214

Newsletter