கோவை வேளாண் பல்கலை சார்பில் நூற்புழுவை ஒழிக்கும் வழிமுறை விளக்கம்



பசுமைக்குடிலில் நூற்புழு நிர்வாகம் தமிழ்நாட்டில் பசுமைகுடில் தற்போது பிரபலமடைந்து வருகிறது. தக்காளி, குடமிளகாய் மற்றும் கொடிக் காய்கறிகள் இம்முறையில் அதிகமாக சாகுபடி செய்கின்றனர் (இதில் நூற்புழுக்களின் தாக்குதல் மிக அதிகமாக உள்ளது). 

இம்முறையில், சாகுபடி செய்யப்படும் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களுள் வேர்முடிச்சு à®¨à¯‚ற்புழு முதன்மையாகக் à®•ருதப்படுகிறது. மேலும்,  à®‡à®µà¯à®µà¯‡à®°à¯à®®à¯à®Ÿà®¿à®šà¯à®šà¯ நூற்புழு தாக்குதல், திறந்த வெளியில் சாகுபடி செய்யப்படும் அதாவது வயல், தோட்டக்கலை பயிர்களைவிட பசுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்யப்படும். பயிர்களில் அதிகமாக காணப்படுவதற்கு பல்வேறுக் காரணங்கள் கூறப்படுகிறது. 

 * அவற்றில் முக்கியமாக, நூற்புழு தாக்குதல் அதிகாரிப்பதற்கான காரணங்கள் ஆனது பசுமைக்குடிலின் படுகை (à®…) பாலீத்தின் பையில் நிரப்பப்படும் மண் கலவை முன்னதாக நூற்புழுக்களால் பாதிக்கப்பட்டிருத்தல். 

 * à®¤à¯‡à®µà¯ˆà®¯à®¾à®© அளவிற்கு அங்ககப் பொருட்கள் மண்கலவையில் இல்லாதிருத்தல். 

 * à®‡à®Ÿà¯ˆà®µà¯†à®³à®¿ இல்லாமல் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்தல் நூற்புழு கட்டுப்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படும் வேப்பம் பிண்ணாக்கு, உயிரியல் கொல்லிகள் மற்றும் இரசாயன கொல்லிகள் à®‡à®Ÿà®¾à®¤à®¿à®°à¯à®¤à¯à®¤à®²à¯.

 * à®¨à¯‚ற்புழுக்கள் இதர ஜரிவராசிகளான பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாவுடன் இணைந்து à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿà¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ ஏற்படக்கூடிய கூட்டுநோயால் பாதிப்பு தீவிரமடைதல்.



கட்டுப்பாட்டு முறைகள்:

1. சாகுபடிக்கு தேவையான மண்கலவையை நூற்புழுக்கள் பாரிசோதனைக்கு உட்படுத்துதல்.

2. அறுவடைக்குப் பிறகு நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட வேர், கிழங்கு போன்ற பயிர்கழிவுகளை அகற்றுதல்.

3. சூரிய மண் வெப்பமூட்டல் மூலம் மண் கலவையில் உள்ள நூற்புழுக்களை அழித்தல்.

4. நூற்புழுக்களுக்கான எதிரி உயிரினங்கள் அதிகமுள்ள நன்கு மக்கிய தொழு உரத்தை மண் கலவையுடன் (12.5டன், எக்) கலந்து இடுதல்.

5. காய்கறி சாகுபடிக்கு முன்பாக கேந்தி என்றழைக்கப்படும் மலர்பயிரை சாகுபடி செய்து தேவைக்கேற்ப ஒன்று அல்லது மூன்று மாதங்களுக்கு பிறகு மடக்கி உழுதல்.

6. சாகுபடிக்கு இரண்டு (அ) மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரமான மண் பதத்தில் வேப்பம் பிண்ணாக்கினை எக்டர் ஒன்றுக்கு 250 கி.கி வீதம் இட்டு நன்கு கலக்குதல்.

7. மண்கலவையில் உயிர் கொல்லிகளான பர்ப்யுல்ரியோசில்லியம் லிலாசினம் மற்றும் பொக்கோனியா கிளாமிடோஸ்போல்ரியா போன்றவற்றை தூள் வடிவில் எக்டர் ஒன்றுக்கு  2.5 கி.கி வீதம் இடுதல்.

8. பண்ணைக்கருவிகள் மற்றும் பண்ணையாட்கள் வெளியிடத்திலிருந்து வரும்போது கருவிகளில் ஒட்டியிருக்கும் மண், வேர்த்துகள்கள் மற்றும் நூற்புழுக்கள் பரவாதவாறு கண்காணித்தல்.

9. பசுமைக்குடிலில் மண்கலவையை பாலித்தீன் பைகளில் நிரப்பி பயிரிடும் முறையில் பழைய பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் (அ) மறுசுழற்சி செய்யாமல் தவிர்த்தல்.

10. நூற்புழுக்களால் பாதிக்கப்படாத அதாவது வேர்களில் முடிச்சுகளோ (அ) உருமாற்றமடைந்த நாற்று, நடவுப் பொருட்களை உபயோகிக்காமல் தவிர்த்தல்.

11. தேவைக்கேற்ப பாரிந்துரைக்கப்படும் அளவில் நூற்புழுக் கொல்லியான பியூரடான் (33 கிகி, எக்டர்) உபயோகித்தல்.

மேற்கூறியவாறு நூற்புழு பரவுதல் மற்றும் தாக்குதலை கணிசமான அளவில் குறைத்து பசுமைக்குடில் பயிர் சாகுபடியாளர்கள் பயன் பெறலாம் என கி. பூர்ணிமா மற்றும் ச. சுப்ரமணியன் நூற்புழுவியல் துறை பேராசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர்.

Newsletter