செப்டம்பர் 2017 மாதத்திற்கான பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு முறைகள்

பொதுவாக தமிழகத்தில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கமானது பொருளாதார சேத நிலைக்குக் குறைவாகவே உள்ளது. ஆதலால், விவசாயிகள் தங்கள் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அறிகுறிகளை விளக்குப் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.



நெற்பயிர்:-

நாற்றங்காலில் (20 சென்டுக்கு) இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 50 மில்லியினை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். 

நெல்லில் இலைச்சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு வயல்களில் விளக்கு பொறி (1 - ஏக்கர்) வைக்க வேண்டும். தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் 25 கிலோ ஒரு எக்டருக்கு அல்லது குளோர்பாபாஸ் 1250 மில்லி அல்லது கார்டாப் 1000 கிராம், எக்டருக்கு பயிர்களில் தெளிக்கவும்.

தற்பொழுது பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டத்துடன் உள்ள சூழலில் பாக்டீரியா இலை கருகல், குலை நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் இவ்விரு நோய்கள் தென்படுவதை கண்காணிக்க வேண்டும்.

நெல்லில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல், பரவலாக நெல் பயிரிடும் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தென்படுகிறது. ஆதலால் விவசாயிகள் குறிப்பாக இயந்திரம் மூலம் நடவு செய்யும் நாற்றங்கால் மற்றும் நடவு நட்ட வயல்களில் மான்கோசோப் (2 கிராம் 1 லிட்டர் தண்ணிருக்கு) தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் நோயின் தாக்கத்திற்கு ஏற்ப தெளிக்கவும்.

கரும்பு பயிரில் நுனிக் குருத்துப்புழு மற்றும் இடைக்கணுபுழு சேதம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் கண்டறியப்பட்டது. சேதத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

1. நன்கு விளைந்த, நுனிக்குருத்து புழு மற்றும் இடைக்கணுபுழு தங்கிய கரும்பை முன்னுரிமை அடிப்படையில் அறுவடை செய்து அரைவைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

2. தாக்கப்பட்ட கரும்புகளை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் மேலும் பெருகுவதையும் மற்ற இளம் பயிர்களுக்கு பரவுதலையும் கட்டுப்படுத்தலாம்.

3. (நுனிக் குருத்துப்புழு மற்றும் இடைக்கணுபுழு) அந்து பூச்சிகளை தொடர்ந்து கண்காணிக்க இனக்கவர்ச்சி பொறிகளை ஒரு எக்டருக்கு இருபது வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

4. நீர் தேக்கம் இல்லாதவாறு நிலத்தை பராமரிக்க வேண்டும்.

5. காய்ந்த கரும்பு சோகைகளை நட்டப்பின் 5, 7 மாதங்களில் நீக்க வேண்டும்.

6. விட்டம் கட்டுவதை செயல்படுவதனால் ஒட்டு மொத்த துளைப்பான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.



பருத்தி:-

சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈக்களின் பாதிப்பு பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் தென்படுகின்றன. ஆதலால் இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 12.5 எண்ணிக்கை ஒரு எக்டருக்கு வைக்கவும் மற்றும் இவற்றைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப் 2.5 கிலோ, 100 லிட்டர் தண்ணீரீல் கலந்து தெளிக்கவும். அல்லது இமிடாகுளோபிரிட் 100 மிலி நீர்ம கரைசலை எக்டருக்கு பயன்படுத்தலாம்.

மேலம். பருத்தியில் சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதல் தென்படுகிறது. ஆதலால் விவசாயிகள் இனக்கவர்ச்சிப் பொறிகளை எக்டருக்கு 12.5 வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும். அசுவினி மற்றும் இலைப்பேன்களை கட்டுப்படுத்த மித்தைல் டெமாட்டான் 25 இ.சி 500 மில்லி (அ) டைமித்தோயோட் 500 மில்லி (அ) புப்ரோபோசின் 25 எஸ்.சி 1000 மில்லி என்ற அளவில் ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரீல் கலந்து தெளிக்க வேண்டும்.



நிலக்கடலை:-

இலை துளைப்பானின் நடமாட்டத்தை கண்டறிய விளக்குப்பொறி ஏக்கருக்கு ஒன்று வைத்து கண்காணிக்கவும். விளக்கு பொறியில் அந்திப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உடனடியாக டைகுளோரிவாஸ் 76 டபுல்யு எஸ்சி 500 மில்லி, ஏக்கர் அல்லது குளோர்பைர்பாஸ் 20 இ.சி. 500 மில்லி, அல்லது பாசலோன் 35 இ.சி. 300 மில்லி ஆகியவற்றை ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

கோவை மற்றும் திண்டிவனம் மாவட்டங்களில் நிலக்கடலையில், வேரழுகல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதல் ஏற்படலாம். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூசணக்கொல்லி ஆகியவற்றை மண்ணில் தெளித்து கட்டுப்படுத்தலாம். முன்பருவ இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் 1000 கிராம் ஒரு எக்டருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பயறு:-

உளுந்து மற்றும் பச்சைபயறில் வேர் அழுகல் நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தேனி மற்றும் மாவட்டங்களில் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு கார்பன்டாசிம் என்ற மருந்தை லிட்டருக்கு 1கி என்ற அளவில் செடியினை சுற்றி விட வேண்டும். மேலும் மஞ்சள் நிற ஒட்டு பொறியை 15 என்ற அளவில் அமைக்க வேண்டும். மற்றும் வேப்ப எண்ணை 2 மில்லி (அ) டைமீத்டோயேட் அல்லது மெத்தில் டெமட்டான் என்ற மருந்தை லிட்டருக்கு 2 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.



வாழை:-

வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் கோவை, ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் அல்லது புராப்பாகோனேசோல், ஆகியவற்றை இலையின் அடிப்பகுதியி தெளிக்கவும். பியூசேரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த கிழங்குகளை கார்பன்டாசிம் 2 கி, லிட்டர் கரைசலில் 30 நிமிடம் நனைத்து நடவு செய்யவும்.  à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ 3, 5 மற்றும் 7 ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கி,லி) கரைசல் தயாரித்து 3 மில்லி லிட்டரை கிழங்கினுள் செலுத்தவும். நோய் தாக்கப்பட்ட மரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கி, லிட்டர்) தயாரித்து மரத்தை சுற்றி 2, 4 மற்றும் 6 ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.



வெங்காயம்:-

வெங்காயத்தில் இலை சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் மேன்கோசெப் 2கி அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கி என்ற விகிதத்தில் தெளிக்கவும். அடிதண்டு அழுகல் நோயை கட்டுப்படுத்த ட்ரைக்கோடொமா விரிடி என்ற பூஞ்சாண கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கி என்ற அளவிலும் மற்றும் ஹெக்டருக்கு 2.5 கிலோ வீதமும் மண்ணில் இடவேண்டும்.



தென்னை:-

தென்னையில் வெள்ளை ஈக்களின் பாதிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் பரவலாக தென்படுகிறது. இரைவிழுங்கி பூச்சிகளும் வெள்ளை ஈகளுடன் சேர்ந்து காணப்படுகிறது. தேவை ஏற்படின், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பூச்சியியல் துறையை அனுகி இரைவிழுங்கியினை பெற்று ஒரு முறை பரவலாக தோப்புகளில் விடுவதால் அவை பெருகி வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஏதுவாகும்.

விவசாய  à®®à®±à¯à®±à¯à®®à¯ தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் கட்டுப்பாடு:-

சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ மற்றும் மாவு பூச்சியின் சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 5, ஏக்கர் வைத்து நடமாட்டத்தை கண்டறியலாம். தேவைப்படின் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணைய் சோப் 1 கிலோ 40 லிட்டர் தண்ணிருக்கு என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தவும்.

வெள்ளை ஈயின் நடமாட்டத்தை மஞ்சள் ஒட்டும் பொறி (12, எக்டர்) அமைத்து கண்காணிக்கவும். தேவைப்படின் மித்தைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீருக்கு அல்லது இமிடாகுளோரோபரிட் 17.8 எஸ்.எல் 2 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.

காய்கறி பயிரில் காய் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் (12 , எக்டர்) அமைத்து அந்திப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறியவும். தாக்கப்பட்ட காய்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை கைகளினால் எடுத்து அப்புறப்படுத்தவும். தேவைப்படின் பேசிலாஸ் துரிஞ்சியசிஸ் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.

Newsletter