தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சார்பில் புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள்


பயிர் இரகங்கள்

நெல் கோ 52



உருவாக்கிய முறை - பிபிடி 5204,கோ (ஆர்) 50.

வயது - 130-135 நாட்கள்.

பருவம் - பின்சம்பா மற்றும் தாளடி.

விளைச்சல் - 6191 கிலோ,எக்டர்.

அதிகபட்ச விளைச்சல் - 10416 கிலோ,எக்டர்.

பயிரிட உகந்த மாவட்டங்கள் - நடவுமுறை நெல் சாகுபடி மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.

சிறப்பியல்புகள் - மத்திய சன்ன வெள்ளை நிற அரிசி, அதிக அரவைத்திறன் மற்றும் முழுஅரிசி காணும் திறன், இடைப்பட்ட அளவு அமைலோஸ், புகையான் மற்றும் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது, குலை நோய், இலையுறை அழுகல் நோய், à®ªà®´à¯à®ªà¯à®ªà¯ புள்ளி நோய் மற்றும் இலையுறை கருகல் நோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

குதிரைவாலி மதுரை 1







95-100 நாட்கள்

பருவம் - அனைத்து பருவங்களிலும் பயிரிட ஏற்றது

விளைச்சல் - தானியம்

மானாவாரி - 1500-1700 கிலோ, எக்டர்

இறைவை - 2200-2500 கிலோ, எக்டர்

தீவனம் - 3000-3300 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 3138 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது

சிறப்பியல்புகள் - குறுகிய கால இரகம், அதிக மகசூல், அதிக இரும்புச் சத்து (16 மில்லி கி, 100 கி தானியம்), தண்டு துளைப்பான் மற்றும் கதிர் பூஞ்சைக்கு எதிர்ப்புத் திறன்.

துவரை கோ 8







உருவாக்கிய முறை - ஏபிகே 1 , எல்ஆர்ஜி 41

வயது - 170 -180 நாட்கள்

பருவம் - ஆடிப்பட்டம்

விளைச்சல் - மானாவாரி - 1600 கிலோ, எக்டர்

இறைவை - 1800 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 2700 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி மற்றும் மதுரை

சிறப்பியல்புகள் - குறுகிய காலம், அதிக மகசூல், மலட்டுத் தேமல் மற்றும் வேரழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன், காய், ஈ மற்றும் காய்த்துளைப்பான் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன்.

உளுந்து கேகேஎம் 1



65- 70 நாட்கள்

பருவம் - டிசம்பர் - ஜனவரி

விளைச்சல் - 607 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 1515 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - நெல் தரிசில் பயிரிட ஏற்ற இரகம்

சிறப்பியல்புகள் - மஞ்சள் தேமல் மற்றும் காய்ப் புழுவிற்கு மத்திய எதிர்ப்புத் தன்மை, வேர் முடிச்சு புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை, 6.7 சதம் அரபினோஸ் வேதிப்பொருள.

உளுந்து ஏடீடி 6



உருவாக்கிய முறை - விபிஎன் 1 , விபிஜி-04-006

வயது - 65-70 நாட்கள்

பருவம் - டிசம்பர் - ஜனவரி மற்றும் ஜனவரி - பிப்ரவரி

விளைச்சல் - 741 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 1515 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - நெல் தரிசில் பயிரிட ஏற்ற இரகம்

சிறப்பியல்புகள் - அதிக மகசூல், பக்க கிளைகளுடன் நேராக வளரும் தன்மை, சராசரி புரதம் 5.7 சதம் அரபினோஸ் வேதிப்பொருள், மஞ்சள் தேமல், இலைச்சுருள் மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன்.

எள் விஆர்ஐ 3



உருவாக்கிய முறை - எஸ்விபிஆர் 1 , டிகேஜி 87

வயது - 75-80 நாட்கள்

பருவம் - இறவை, கார்த்திகை, தை மற்றும் மாசி பட்டம்

விளைச்சல் - 1000 கிலோ,எக்டர் (கார்த்திகை, தை)

1060 கிலோ,எக்டர் (மாசி)

அதிகபட்ச விளைச்சல் - 1250 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாடு முழுவதும்

சிறப்பியல்புகள் - உயர் விளைச்சல், திரட்சியான வெள்ளை நிற எள் விதை, ஆதிக எண்ணைய்ச்சத்து (50.1 சதம்)

ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 2



உருவாக்கிய முறை - எம்என் 619-1 , எஸ்கேஐ 215

வயது - 180 நாட்கள்

பருவம் - அனைத்து பருவங்கள்

விளைச்சல் - 2089 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 3750 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள்

சிறப்பியல்புகள் - உயர் விளைச்சல் வீரிய ஒட்டு இரகம், நெருக்கமான காய்கள், நீளமான குலைகளுடன் அதிக பெண் பூக்கள்,  à®Žà®³à®¿à®¤à®¿à®²à¯ சாயாத தன்மை, காய்கள் வெடித்து சிதறாத பண்பு, ஊடுபயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது, வாடல் நோய்க்கு

எதிர்புத்திறன், காவடிப்புழு, காய்ப்புழு, புரடினியாப்புழு மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி போன்ற பூச்சி தாக்குதலுக்கு தாங்கி வளரும் தன்மை.

பருத்தி கே 12







உருவாக்கிய முறை - கே 11 , கே 9

வயது - 135-140 நாட்கள்

பருவம் - புரட்டாசிப்பட்டம் (அக்டோபர் - நவம்பர்)

விளைச்சல் - 1193 கிலோ, எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 2365 கிலோ, எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது.

சிறப்பியல்புகள் - அதிக காய் எடை (2.7 கிராம்), உயர் நடுத்தர இழை நீளம் (27.7 மி.மீ), அதிக பருத்தி மகசூல், அதிக

இழை வலிமை (22.1 கி,டெக்ஸ்), இலைத் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு சக்தி, வறட்சித் தாங்கும் தன்மை.

கரும்பு கோசி 25



உருவாக்கிய முறை - கோ 85002 , எச்ஆர் 83-144

வயது - 10 மாதங்கள்

பருவம் - முன் பருவம் (டிசம்பர் - பிப்ரவரி)

விளைச்சல் - 145.72 டன், எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 168.01 டன், எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

சிறப்பியல்புகள் - அதிக மகசூல், செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புதிறன், வறட்சி தாங்கும் தன்மை, மறுதாம்புக்கு ஏற்றது.

புடலை கோஎச் 1







உருவாக்கிய முறை - கேத்தனூர் குட்டை புடல் (ஐசி 622556) , கோ 2 (ஐசி 0599591)

வயது - 160-170 நாட்கள்

பருவம் - ஜூன் - ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி

விளைச்சல் - 69 டன், எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 85 டன், எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாடு முழுவதும் (நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர)

சிறப்பியல்புகள் - கதிர்க் கூம்பு வடிவத்தில் உள்ள இக்காயானது வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மங்கிய வெள்ளை  à®¨à®¿à®±à®¤à¯à®¤à®¿à®²à¯ வெண்ணிற கோடுகளை கொண்டுள்ளது. அடிச்சாம்பல் நோய், சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் போன்ற நோய்கள் மற்றும் பழ ஈயின் தாக்கம் குறைவாக உள்ளது. நீண்ட நாட்கள் மகசூல் தரவல்லது.

சுரைக்காய் பிஎல்ஆர் 1



உருவாக்கிய முறை - சிறுவந்தாடு (விழுப்புரம்) வளர்ப்புகளிலிருந்து தனி வழி தேர்வு

வயது - 130-135 நாட்கள்

பருவம் -ஜூன்- ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி

விளைச்சல் - 32.4 டன், எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 43.5 டன், எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர், வேலு}ர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்

சிறப்பியல்புகள் - பச்சடி செய்ய ஏற்றது. நடுத்தர நீளமான, குறுகிய அடிப்பகுதியுடைய வெள்ளை நிற புள்ளிகளுடன் கலந்த பச்சை நிற காய்கள். பழ ஈ, சாம்பல் மற்றும் அடிச்சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன். காய்கள் இளமுதிர்ச்சி நிலையில்

பச்சடிக்காகவும் முழு முதிர்ச்சி நிலையில் சமையலுக்காகவும் உகந்தது.

பிரெஞ்சு அவரை ஊட்டி 3







உருவாக்கிய முறை - தூத்தூர்மட்ட இனத்திலிருந்து தனி வழி தேர்வு

வயது - 90 நாட்கள்

பருவம் - பிப்ரவரி- மே (தாழ்ந்த நிலைப்பகுதி மற்றும் உயர்ந்த நிலைப்பகுதி) மற்றும் ஆகஸ்டு- அக்டோபர் (தாழ்ந்த நிலைப்பகுதி)

விளைச்சல் - பச்சைக் காய்கள் - 39.81 டன், எக்டர்

அதிகபட்ச விளைச்சல் - 46.42 டன், எக்டர்

பயிரிட உகந்த மாவட்டங்கள் - கடல் மட்டத்திலிருந்து 1200 மீ முதல் 2200 மீ உயரம் வரை உள்ள நீலகிரி மலைத்தொடர் மற்றும் அதற்கிணையான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதிகளுக்கு ஏற்றது.

சிறப்பியல்புகள் - கொத்துக் கொத்தான காய்கள் (7-9 , கொத்து), குறைவான நார்த்தன்மை கொண்ட காய்கள், காய்களில் புரோட்டின், மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் வினைதிறன் (2625 மைக்ரோகிராம், கிராம்), வெள்ளை ஈ மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன்.

பண்ணைக் கருவிகள்

நெல்லிக்காய் விதை நீக்கும் இயந்திரம்







திறன் - 100 கிலோ, மணி

மோட்டார் சக்தி - 2 குதிரை சக்தி

விதை நீக்கும் திறன் - 95 சதம்

வேலையாட்கள் - ஒன்று

செலவு - ரூ.5, கிலோ

கருவியின் விலை - ரூ.60,000-

சிறப்பியல்புகள் - நெல்லிக்காய்க்கு குறைந்த சேதாரம் (5 சதம் வரை)

அதிக அளவு விதை நீக்கும் திறன்

ஒருங்கிணைந்த சூரியக்கூடார மற்றும் உயிர் எரிபொருள் உலர்த்தி







தொழில்நுட்ப விளக்கம் - தேங்காய் கொப்பரை, மஞ்சள், மிளகாய், மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை உலர்த்தும் கருவி, புற ஊதா கதிர்கள் பாதிக்காத பாலீத்தீன் உறை வழியாக வெப்பம் பெறப்படுகிறது. உயிர்ம வெப்பக் காற்று உலர்த்தியில் எரியும் கலன், வெப்ப பரிமாற்றி மற்றும் வெப்பக் காற்று விநியோகிக்கும் குழாய்கள் உள்ளன. தேவைக்கேற்ப வெப்பநிலை மற்றும் 

ஈரப்பம் கட்டுப்படுத்தப்பட்டு சீராக பராமரிக்கப்படுவதால் உலர்த்தப்படும் பொருட்களின் தரம் குறைவதில்லை.

சிறப்பம்சங்கள் - உலர்த்தியின் கொள்ளளவு ஒரு முறைக்கு 2 டன் கொப்பரை மற்றும் மஞ்சள்.

சூரிய வெப்ப முறையில் பகல் நேரங்களிலும், உயிர்ம எரிபொருள் முறையில், இரவு மற்றும் மழை காலங்களிலும் தொடர்ச்சியாக உலர்த்த முடியும்.

தேங்காய் உரி மட்டை மற்றும் ஓடு ஆகியவை உயிர்ம எரிபொருட்கள்.

பொருளாதாரம் - ஒருங்கிணைந்த உலர்த்தியில் கொப்பரை உலர்த்த 48 மணி நேரம் (2 நாட்கள்), சூரிய கூடார உலர்த்தியில் 4-5 நாட்கள், திறந்த சூரிய வெப்பத்தில் 6-8 நாட்கள் ஆகிறது. உலர்த்தும் நேரம் மஞ்சளுக்கு 96 மணி நேரம் (4-5 நாட்கள்) இது 70 சதவீதம் திறந்த சூரிய ஒளியை விட குறைவு. உலர்த்தும் செலவு - கொப்பரை ஒரு டன்னுக்கு ரூ.1762- மூதலீடு திரும்ப பெறும் காலம் 3.59 வருடங்கள் ஆகும்.

Newsletter