தட்டைப்பயிறை தாக்கும் கருகல் நோய்: விவசாயிகள் வேதனை


தட்டைப்பயிறு செடிகளில் கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை‌த் தெரிவித்துள்ளனர். 

தேனி மாவட்டம் போடியைச் சுற்றியுள்ள சுந்தராஜபுரம், அம்மாபட்டி உட்பட அப்பகுதி கிராமங்களில் தட்டைப்பயிறு விவசாயம், வறட்சி கா‌ரணமாக கிணற்று பாசனம் மூலமே நடைபெற்று வந்தது. இந்நிலையில் போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், கருகல் நோய் ஏற்பட்டு விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை போவதால் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter