தாவரங்கள் மற்றும் தானியங்களில் பூச்சிநோய் தடுக்க ஆகஸ்ட் மாதத்திற்கான பூச்சிநோய் கண்காணிப்பு

நெற்பயிர்:



கோயமுத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டுப் புழு தாக்குதல் பரவலாக காணப்படுகின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்த வயல்களில் விளக்கு பொறி அமைத்து (1, ஏக்கர்) அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் வேப்பங் கொட்டைச்சாறு 5 சதம் அல்லது பாசலோன் 35 இ.சி 1500 மில்லி/எக்டர் அல்லது குனைல்பாஸ் 25 இ.சி 1000 மில்லி/எக்டர் அல்லது பாஸ்மோமிடான் 40 எஸ்.எல் 1250 மில்லி/எக்டர் தெளிக்கவும்.

நெல்லில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல்; பரவலாக நெல் பயிரிடும் பகுதிகளில் தென்படுகிறது. ஆதலால் விவசாயிகள் குறிப்பாக இயந்திரம் மூலம் நடவு செய்யும் நாற்றங்கால் மற்றும் நடவு நட்ட வயல்களில் மான்கோசோப் (2 கிராம் 1 லிட்டர் தண்ணிருக்கு) தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் நோயின் தாக்கத்திற்கு ஏற்ப தெளிக்கவும்.

பருத்தி:







திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டங்களில் பருத்தியில் காய்ப்புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு ஐந்து வைத்து தாய் ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும். அதிகம் சேதம் உள்ள பயிர்களில் (1000 லிட்டர் தண்ணீர், எக்டருக்கு) கீழ்காணும் ஏதாவது ஒரு மருத்தினை பாசலோன் 35 இ.சி 2.0 லிட்டர்/எக்டர் அல்லது குனைல்பாஸ் 25 இ.சி 2 லிட்டர்/எக்டர் அல்லது கார்பரில் 50 WP 2.5 கிலோ/ஏக்கர் அல்லது பிரபினோபாஸ் 50 இ.சி.1000 மில்லி/எக்டர்; பயிர்களில் தெளிக்கவும்.

நிலக்கடலை:



கோயமுத்தூர், க்ஷடவ்ரோடு, தர்மபுரி, திருவண்ணமாலை, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் நிலக்கடலையில் இலைச்சுருட்டு புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும் தேவைப்படின் பயிர்களில் தெளிக்கவும். டைபுளுபென்சுரான் 25 டபிள்யூ .சி400 கிராம்/எக்டர் அல்லது மானோகுரோட்ட பாஸ் 36 டபிள்யூ .சி 500 மில்லி/எக்டர் அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி 1250 மில்லி/எக்டர் அல்லது குயினல்பாஸ் 25 இ.சி 1500 மில்லி/எக்டர்.

விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலையில், வேரழுகல் நோய் தாக்குதல் ஏற்படலாம். இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூசணக்கொல்லி 0.1% என்ற அளவில் மண்ணை நனைத்து கட்டுப்படுத்தலாம்.

பயிறு:







உளுந்து மற்றும் பச்சைபயிரில் வேர் அழுகல் நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு கார்பன்டாசிம் என்ற மருந்தை லிட்டருக்கு 1 கி என்ற அளவில் செடியினை சுற்றி மண்ணை நனைக்க வேண்டும். மேலும் மஞ்சள் நிற ஒட்டு பொறியை 15 என்ற அளவில் அமைக்க வேன்டும். மற்றும் டைமீத்டோயேட் அல்லது மித்தைல் டெமட்டான் என்ற மருந்தை லிட்டருக்கு 2 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

வாழை:







வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல்; கோயமுத்தூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1% அல்லது மான்கோசெய் 0.25% ஒட்டு திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். பியூசரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த கிழங்குகளை கார்பன்டாசிம் 2 கி,லிட்டர் கரைசலில் 30 நிமிடம் நனைத்து நடவு செய்யவும். மரத்தின் 3, 5 மற்றும் 7 ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கி,லி) கரைசல் தயாரித்து 3 மி.லி யை கிழங்கினுள் செலுத்தவும்; நோய் தாக்கப்பட்ட மரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கி,லிட்டர்;) தயாரித்து மரத்தை சுற்றி 2, 4 மற்றும் 6 ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.

வெங்காயம்:



வெங்காயத்தில் இலை சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் மேன்கோசெப் 2 கி அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கி; என்ற விகிதத்தில் தெளிக்கவும். அடிதண்டு அழுகல் நோயை கட்டுப்படுத்த ட்ரைக்கோடர்மா விரிடி என்ற பூஞ்சாண கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கி என்ற அளவிலும் மற்றும் ஹெக்டருக்கு 2.5 கிலோ வீதமும் மண்ணில் இடவேண்டும்.

வெண்டை:







மஞ்சள் தேமல் நோய்யை கட்டுப்படுத்த வெள்ளை ஈ யின் நடமாட்டத்தை மஞ்சள் ஒட்டும் பொறி (12,எக்டர்) அமைத்து கண்காணிக்கவும். தேவைப்படின் மித்தைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி அல்லது இமிடாகுளோரோபைரிட் 17.8 எஸ்.எல் 2 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.

மிளகாய்:







மிளகாயில் காய் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் (12, எக்டர்) அமைத்து அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறியவும். தாக்கப்பட்ட காய்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை கைகளினால் எடுத்து அப்புறப்படுத்தவும். தேவைப்படின் பேசிலாஸ் துரிஞ்சியசிஸ் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.

Newsletter