உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு வேளாண்துறை அறிவிப்பு

அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கை: விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கும் போது ரசீதில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி வரிகளை தெளிவாகக் குறிப்பிட்ட வேண்டும். இதில் சந்தேகங்கள் ஏற்பட்டால், உரிய ஆதாரங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை விவசாயிகள் அணுகலாம்.

உரம், பூச்சி மருந்து சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உரங்களுக்கான ஜிஎஸ்டி வரியான 5 சதவீதத்தை சிஜிஎஸ்டி- 2.5 சதவீதம் எனவும், எஸ்ஜிஎஸ்டி - 2.5 சதவீதம் எனவும் குறிப்பிட்டு பில் அளிக்க வேண்டும்.

பூச்சி மருந்துகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை சிஜிஎஸ்டி- 9 சதவீதம் எனவும் ,எஸ்ஜிஎஸ்டி 9 சதவீதம் எனவும் பிரித்து க் காட்டி பில் செய்திட வேண்டும். ஜிஎஸ்டியைக் கூடுதலாகச் சேர்த்து அதிக பட்ச பழைய விலையையும், அதிக பட்ச புதிய விலையையும் நன்றாகத் தெரியும்படி மூட்டைகளில் அச்சிட்டு விற்பனை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter