தேசிய பாரம்பரிய நெல் திருவிழா: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேசிய அளவிலான 11-ஆவது பாரம்பரிய நெல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

நாகை சாலை அண்ணாசிலை அருகிலிருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உருவப் படத்துடன் பேரணி புறப்பட்டது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.வி. துரைராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியை, மாநில நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சி. பாலகிருஷ்ணராஜா தொடங்கி வைத்தார்.

பாரம்பரிய நெல், அரிசி வகைகள், வேளாண்மைக் கருவிகள், மூலிகை மற்றும் பழமரக் கன்றுகள் அடங்கிய கண்காட்சியை தொழிலதிபர் ஏ.ஆர்.வி. விவேக் தொடங்கி வைத்தார். கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் சிக்கல் à®…. அம்பலவாணன், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கே. நடராஜன், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் எஸ். நாகூர்அலி ஜின்னா விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:... மேலும் படிக்க

Newsletter