அரசு மானியத்துடன்கூடிய தீவனப் பயிர் சாகுபடி திட்டம்: ஆட்சியர் தகவல்

கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 75 சதவீதம் தொகை தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே, தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

நிகழாண்டு (2017-18) அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது. இறவையில் கம்பு, நேப்பியர் தீவனப்பயிர் 14 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன புல் கரணைகள் பயனாளிகளுக்கு அதிகபட்சம் 1 ஏக்கருக்கு வழங்கப்படும்.
 à®®à®¾à®©à®¾à®µà®°à®¿à®¯à®¿à®²à¯ 14 ஏக்கர் பரப்பில் தீவன சோளம் மற்றும் தீவன தட்டைப்பயிறு சாகுபடி செய்திட தீவன விதைகள் பயனாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஏக்கருக்கு வழங்கப்படும்.

முற்போக்கு விவசாயிகள் மூலம் சான்றிதழ் பெற்ற தீவனச்சோளம் மற்றும் தீவன தட்டைப்பயிறு விதைகளை உற்பத்தி செய்வதற்கு தீவன விதைகள் இலவசமாக வழங்கப்படும்.

கால்நடைகள் வளர்ப்போரிடையே நவீன தீவன உற்பத்தி முறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணையில் வழங்கப்படும். அசோலா திடல் அமைக்க 100 சதவீத மானியத்துடன் 400 அலகுகள் (பயனாளிகள்) செயல்படுத்தப்படவுள்ளன. மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி திட்டம் 10 அலகுகள் (பயனாளிகள்) செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தை கால்நடை வளர்போர் முழுமையாக பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter