பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வலங்கைமான் வட்டம் பூந்தோட்டம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன், பருத்திச் செடிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ், பருத்திச் செடிகளில் பப்பாளி மாவுப்பூச்சி, பருத்தி மாவுப்பூச்சி, இளம்சிவப்பு மாவுப்பூச்சி, இரட்டைவால் மாவுப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மாவுப்பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கூறியதாவது: பருத்தியில் காணப்படும் பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிடவேண்டும். இதனை வெளியிடும் சமயங்களில் ரசாயன மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

பின்னர், இதுதொடர்பாக பருத்தி வயல்களில் செயல் விளக்கம் நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter