கருந்தலை புழு தாக்குதல்: தென்னை மரங்களுக்கு மானிய விலையில் மருந்துகள் வழங்க கோரிக்கை

போச்சம்பள்ளி பகுதியில் கருந்தலை புழு தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களுக்கு மானிய விலையில் மருந்துகள் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 à®ªà¯‹à®šà¯à®šà®®à¯à®ªà®³à¯à®³à®¿ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா விளைச்சலுக்கு இணையாக தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். போச்சம்பள்ளி, அகரம், செல்லம்பட்டி, மருதேரி, மொரசிப்பட்டி, காவாப்பட்டி, முதுகம்பட்டி, புலியூர் மற்றும் பண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

 à®‡à®¨à¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯, செல்லம்பட்டி அகரம் மருதேரி பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் கருந்தலை புழு தாக்குதல் ஏற்ப்பட்டு தென்னை ஓலைகள் காய்ந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பலதரப்பட்ட மருந்துகளையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளித்து கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மானிய விலையில் மருந்துகள் கிடைக்க உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter