சூறாவளிக் காற்று : 5000 வாழைகள் முறிந்து விழுந்தன

குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சூறைக் காற்றால் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகாநந்தத்துக்குச் சொந்தமான 2 ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அசோகன், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சிலருக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன

Newsletter