கொடைக்கானலில் பட்டர் புரூட் சீசன் தொடக்கம்

கொடைக்கானல் பழக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பட்டர் புரூட்.

கொடைக்கானலில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த பட்டர் புரூட் பழ சீசன் தொடங்கியுள்ளது.

இங்கு பிளம்ஸ், பீச்சஸ், வாழை, ஆரஞ்சு போன்ற பழவகைகள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது மருத்துவ குணமுள்ள பட்டர் புரூட் சீசன் தொடங்கியுள்ளது. இப்பழம் சின்னபள்ளம், வெள்ளப்பாறை, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர், பி.எல்.செட் உள்ளிட்ட பகுதிகளில் விளைகிறது. இப்பழங்கள் கொடைக்கானலில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது:

மருத்துவ குணம் கொண்ட இப்பழம் கோடை வெயிலுக்கு உகந்தது. மேலும், உடல் வெப்பத்தை தணிக்கும். உடலில் வலிமையைக் கூட்டும். இது அழகு சாதனப் பொருள்களில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. மேலும் இந்தப் பழம் கர்நாடகம், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது சீசன் காலமாக இருப்பதால் நன்கு விற்பனையாகிறது என்றனர்.

Newsletter