வேளாண் பல்கலையில் “வேளாண் மற்றும் உயிர் அமைப்புகள் பொறியியல் போக்குகள்” குறித்து தேசிய கருத்தரங்கம்


“வேளாண் மற்றும் உயிர் அமைப்புகள் பொறியியல் போக்குகள்”  à®Žà®©à¯à®± தலைப்பில் தேசிய கருத்தரங்கின் தொடக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இத்திட்டத்திற்கு புதுடெல்லி வேளாண் அமைச்சக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதியுதவி வழங்கியது.

இக்கருத்தரங்கில் தலைவர் மற்றும் முதல்வர் சி.திவாகர் துரைராஜ் வரவேற்புரையாற்றினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமீப காலத்திய வளர்ச்சி நோக்கிய ஆய்வுச் சமூகங்களை வெளிப்படுத்துவதற்காக இத்தகைய அறிவியல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கருத்தரங்கின் முதன்மை உரையை பதிவாளர் சி.ரா.அனந்தக்குமார் வழங்கினார். மேலும் வேளாண் எரிசக்தி, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வேளாண் பதன்செய் பொறியாளர்களின் பங்கு, வேளாண் மற்றும் நாட்டின் நலனுக்காக அதிக அளவில் பயன்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்திலுள்ள முக்கிய சவால்களான தொழிலாளர் பற்றாக்குறை, ஆற்றல் நெருக்கடி, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு போன்ற காரணிகளை களைவதற்கான தீவிர தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டினார்.

தேசிய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் க.அழகுசுந்தரம் துவக்கவுரை ஆற்றினார். மேலும் அவர், வேளாண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பண்ணை இயந்திரவியல், உயிர் ஆற்றல், உணவு மற்றும் வேளாண் பதன்செய்தல், அறுவடை தொழில்நுட்பம் மற்றும் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆகிய வேளாண் பொறியியல் துறைகளின் பங்கைப்பற்றி பாராட்டி உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில், போபால் ஐசிஏஆர்- சிஐஏஇ, சென்னை ஐஐடி, பெங்களுர் யுஏஎஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை சிஎஸ்ஐஆர், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, ஜல்கான் ஜெயின் பாசனம், நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகம் மற்றும் கோவை ஐசிஏஆர்- சிஐஏஇ ஆகிய நிலையங்களிலிருந்து வந்திருந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

இறுதியாக கருத்தரங்கு துணைத்தலைவர் மற்றும் வேளாண் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டி.மனோகர் ஜேசுதாஸ் நன்றி உரையாற்றினார்.

Newsletter