போடியில் பரவலான சாரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

போடியில் வெள்ளிக்கிழமை பரவலான சாரல் மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போடி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலையில் போடி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், ஊத்தாம்பாறை, வடக்குமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

இந்த மழையினால், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் செழிப்படையும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மா விளைச்சலும் நன்றாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter