பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவு

பரமத்தி வேலூர் வெற்றிலை ஏல சந்தையில் நிகழ்வாரம் வெற்றிலைகள் குறைந்த விலைக்கு ஏலம் போனது.

பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,500-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 3,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 2, 500-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் மார்) ரூ. 2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை(இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 2 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 1,500-க்கும் ஏலம் போனது.

ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் வெற்றிலை கொடிகள் காயும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வெற்றிலைகளை அதிக அளவில் பறித்து 104 கவுளிகள் கொண்ட சுமையாக ஏலச் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். வரத்து அதிகரித்திருந்ததால் விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter