இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தியும், இந்த விவகாரத்தில் தீர்வுகாணாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், வஉசி மைதானத்தில் ஒன்றுதிரண்டுள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து நாளாவது நாளாக இன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்னும் பெற்றோர் தனது ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தும் தொடர்ந்து தமிழரின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும் வரை இப்போராட்டம் தொடரும். அந்த தீர்ப்பே அடுத்து வரும் தேர்தலில் எங்களது வாக்கினை உறுதிசெய்யும் என்று கூறினார்.



போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குருகுலம் பள்ளி நிறுவனர் மயிலிறகு சுந்ராஜன் நமது நிருபரிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது மாணவர்களால், இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் உரிமை மீட்பு போராட்டமானது அப்துல்கலாமின் கனவுகளை நிரைவேற்றியதாகவே அமைகிறது. இன்றைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் நேரத்தை வீனடித்துக்கொண்டிருப்பதாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க அவர்களே சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைந்து தன்னெழுச்சியாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அனைத்து தரப்பினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளின் ஆதரவின்றி தங்களுக்கென தனி தலைவனின்றி மாணவர்கள் ஒவ்வொருவரும் தலைமையேற்று போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு எப்போதும் மாற்றான்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தடைசெய்யத் தெரிந்த மத்திய அரசுக்கு தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முடிவு எடுக்க முடியவில்லையா. 

இந்த முறை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்றால் அவர்கள் நம் முதுகெழும்பான பாரம்பரியத்தை உடைத்து விடுவார்கள். இப்போராட்டம் தமிழர்களின் வரலாற்றில் நிச்சயமாக இடம்பெரும்" என்றார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...