கோவை மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிளான 7.61 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு…!

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய 7.61 ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய 7.61 ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முத்துவேலப்பன் மற்றும் சாமிநாதன்.



இவர்கள், அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.



இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை கோவை உதவி ஆணையாளர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில், துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மதுக்கரை போலீஸார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, அவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7.61 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அதனை திருக்கோவில் செயல் அலுவலர் சரண்யா வசம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...