திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்..!

கடையை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.



நியாயவிலைக்கடைகளை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் அடையாள அட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் போது தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டால் உரிய பதிவேட்டில் குடும்ப அட்டைதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.

மண்ணெண்ணெய் பேரல்கள் மற்றும் உரங்கள் அருகில் அத்தியாவசியப் பொருட்களை வைக்கக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...