பீட்டாவிற்கு ஆதரவாக பேசிய சினிமா நடிகர்களை எதிர்த்து பேசிய நடிகர் ரஞ்சித்


கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடிகர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித்; தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பிட்டாவை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஜாதி, மதம் இல்லாமல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து தமிழகம் முழுவதும் முதல்முறையாக வன்முறை இல்லாத போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் அரசியல் கட்சிகள் இல்லாமல் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய, மாநில அரசு இந்த பிரச்சனையை அரசியாலக்கப்பட்டும் தமிழர்களின் உணர்வையும்,  உரிமையும் விளையாடுகிறது. ஆனால், இந்த போராட்டம் மாணவர்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழர்களின் உரிமையை தகர்க்க முடியாது.

அதேபோல், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசும் நடிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இங்கு அவர்கள் பிழைத்தும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டும்,  பீட்டாவிற்கு உறுதுணையாக இருந்து கொண்டு டிவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்கள் மூலமாக பீட்டாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு கேவலமான ஒரு செயலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கோபங்களுக்கு விரைவில் அவர்கள் ஆளாகக் கூடுவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...