'என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம்' :கோவையில் நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு தனது ஆதரவினை தெரிவித்து இன்று கோவை வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டாம். ஜல்லிக்கட்டை  நடத்த அனுமதிக்கும் வரை உலகமெங்கும் ஏதாவது ஒரு விபத்து நடக்கும். நேற்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதே அதற்கு உதாரணம். அதனால், தயவு செய்து ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை வாழவிடுங்கள். 

கர்நாடக மாநிலம் தண்ணீர் விடாமல் இருக்கிறது, அதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில உரிமை பிரச்சனைகளாக கருதும் அரசு, ஜல்லிக்கட்டை ஏன் இந்திய அரசியலாக்குகிறது. இது எங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் உரிமை. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் தொடரும்" என்றார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...