ஏழு மாவட்ட விவசாயிகளுடன் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடல்


கோயம்புத்தூர் மாவட்டம், சுற்றுலா மாளிகை கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விவசாயிகளுடன் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  



இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விவசாயிகளின்  கோரிக்கைள், விவாசாயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வறட்சியிலிருந்து, வன விலங்கு மோதல்கள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள், குளங்கள் தூர்வாருதல் தொடர்பாகவும், வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 100 சதவிகிதம் நிவாரணத்தொகை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு வறட்சியினை தாங்கி வளர்க்கூடிய பயர்களை விவசாயம் செய்ய வேண்டும். முதலமைச்சராக அம்மா இருந்தபொழுது எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுத்தரோ, அதோ நிலைபாட்டில் தான் விவசாயிகளின் நலன்காக்கும் அரசாக இந்த அரசு தொடர்ந்து விளங்கும். அனைத்துப் பிரச்சனைகளிலும் நாங்கள் என்றும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் என அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...