ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை  மாநகராட்சி முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று 15/01/2017 பொங்கல் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக  பாரம்பரியப்படி  கோலாகலமாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பம்சமாக ஆதரவற்ற முதியோர்களுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இணைந்து இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.





விழாவில்   உரி அடித்தல் விளையாட்டு, கயிறு இழுத்தல்,  எலுமிச்சை பழம் வாயில் சுமந்து செல்லும் விளையாட்டு, போன்ற விளையாட்டுகள் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது. 

போட்டிகளில் வெற்றி தோல்வியென பிரிக்காமல்  போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் நிகழ்ச்சியை மெருகூட்ட சாலை வழி செல்பவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு அவர்களும் கலந்து கொண்டதும் விழா மேலும்  சிறப்படைய காரணமாக இருந்தது. மேலும் திரு தொல்காப்பியன் அவர்களின் சிலம்பாட்டமும், தடம் அமைப்பின் இசை  நிகழ்ச்சியும் இணைந்து இருந்தது. 

இந்த பொங்கல் விழா காப்பகத்தில் உள்ள  முதியவர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அடைந்தது  மட்டும் இல்லாமல் பலருக்கு இது போன்ற விழாவில் கலந்துக் கொண்டது வாழ்வில் முதன் முறையாகவும் இருந்தது.



விழாவை காண வந்த பொதுமக்கள் கூறும் பொழுது ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் ஆதரவற்றவர்களுக்கான  இந்த பொங்கல் விழாவை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்து போகிறோம்.  எங்கள் வீட்டில் கூட இவ்வளவு மகிழ்ச்சியான எந்த விழாவும் நடந்தது இல்லை கண்டதும் இல்லை. பாட்டிகளின் இந்த உற்சாகமான விளையாட்டை கண்டே நாங்கள் காப்பகத்தினுள் வருவதற்கு காரணமாக இருந்தது என்றனர். 

இறுதியாக பொங்கல் வைத்து இயற்கை இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் கரும்பும் பொங்கலும் வழங்கப்பட்டது.

காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது, மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு புத்தாடைகளும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது, அத்துடன் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்  பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. 

முதியவர்களுக்காக இந்த  உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...