ஜல்லிகட்டு குறித்து நுண்ணிய சிற்பம் வடித்த தங்க நகை தொழிலாளி


ஜல்லிகட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 300 மில்லிகிராம் எடையில் ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவதை போன்ற மிகச்சிறிய அளவில் வடிவமைத்துள்ளார்.



கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளியான ராஜா மிக சிறிய அளவிலான நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிகட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக 300 மில்லிகிராம் எடையில் மிகச்சிறிய அளவில் ஜல்லிகட்டு போட்டியினை வடிவமைத்துள்ளார். வீரர் ஒருவர் ஜல்லிகட்டு காளையை அடக்கும் விதமாக தீக்குச்சியின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டினை அனுமதிக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த நுண்ணிய சிற்பத்தினை வடிவமைத்து இருப்பதாக தங்க நகை தொழிலாளி ராஜா தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...