கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெயுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த தம்பதியினரால் பரபரப்பு..!

குறைதீர்ப்பு நாளான இன்று மனு அளிக்க வந்த போத்தனூரை சேர்ந்த தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு.



கோவை: கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெயுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று மனு அளிக்க வந்த போத்தனூரை சேர்ந்த ராஷ்மி, செல்வம் தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளனர்.



அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராஷ்மி தனது அம்மா தமிழ்ச்செல்வி அப்பகுதியில் உள்ள கல்பனா என்பவரால் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்பனா தனது அம்மாவின் பெயரில் உள்ள காலிமனையிட பத்திரம் மற்றும் வெற்று வங்கி காசோலை ஆகியவற்றை வைத்துக்கொண்டு சில நபர்களைக் கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பமிட்டு பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும், அந்த நபர்களிடம் இருந்து தன்னையும் தனது அம்மாவையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

மேலும், மண்ணெண்ணெயுடன் தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...